துணை முதல்வர் அறிவிப்பு வந்ததும் உதயநிதி செய்த செயல்.. மொத்தமாக ஸ்தம்பித்தது

Update: 2024-09-29 02:57 GMT

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வந்தது. துணை முதல்வராக்க கோரி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு சமீபத்தில் பதில் அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என தெரிவித்து இருந்தார். இதன் தொடர்ச்சியாக உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்க முதலமைச்சர் ஸ்டாலின் வைத்த பரிந்துரையை ஏற்று ஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. துணை முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் அறிவிப்பை திமுகவினர் கொண்டாடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்