'காஷ்மீர் ஃபைல்ஸ்' சர்ச்சை ; "காஷ்மீர் பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம்" - எம்.பி. சஞ்சய் ராவத்

காஷ்மீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

Update: 2022-03-20 11:27 GMT
காஷ்மீர் பிரச்சனையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். அண்மையில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் குறித்து பேசிய அவர், காஷ்மீர் ஃபைல்ஸ் ஒரு திரைப்படம் மட்டுமே என்றும், வரும் தேர்தலில் இந்த திரைப்படத்தால் யாருக்கும் அரசியல் ஆதாயம் கிடைக்காது என்றும் குறிப்பிட்டார். காஷ்மீர் போன்ற சர்ச்சையான விவகாரத்தை கையிலெடுத்து அரசியல் செய்வது சரியானது இல்லை என்ற சஞ்சய் ராவத், தேர்தல் வருவதற்குள் காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மக்களை கடந்து விடும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்