“5 மாநில காங். தலைவர்கள் ராஜினாமா செய்யவேண்டும்“ - சோனியா காந்தி அதிரடி உத்தரவு
5 மாநில தேர்தல் தோல்வி காரணமாக, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
5 மாநில தேர்தல் தோல்வி காரணமாக, மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் தேர்தல் தோல்வி காரணமாக 5 மாநில காங்கிரஸ் தலைவர்களை ராஜினாமா செய்யுமாறு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார். கட்சியில் மறு சீரமைப்பு செய்வதற்காக இந்த உத்தரவை சோனியா காந்தி பிறப்பித்துள்ளதாக டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட செயற்குழு கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே உத்தரகாண்ட் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று அம்மாநில காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியல் ராஜினாமா செய்துள்ளார் அவர் தனது ராஜினாமா கடிதத்தை சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளார்.