முதல் முறையாக போட்டியிட்டு; 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி

உத்தரபிரதேசத்தில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெற்றிபெற்றார்.

Update: 2022-03-10 12:31 GMT
உத்தரபிரதேசத்தில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெற்றிபெற்றார்.

 கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து ஆசாத் சமாஜ் கட்சி தலைவர் சந்திரசேகர் ஆசாத் போட்டியிட்டார். இதில் 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகர் ஆசாத்தை பின்னுக்கு தள்ளி யோகி ஆதித்யநாத் வெற்றிப்பெற்றார். ஐந்து முறை எம்பியாக இருந்த யோகி ஆதித்யநாத் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களமிறங்கினார். இதில் வெற்றிபெற்றதால் மீண்டும் முதலமைச்சராகும் வாய்ப்பை யோகி ஆதித்யநாத் பெற்றுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கர்ஹல் தொகுதியில் 61 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
Tags:    

மேலும் செய்திகள்