பாஜகவுக்கு சாபம் விட்ட அமிதாப் பச்சன் மனைவி
பாஜகவிற்கான கெட்ட காலம் விரைவில் வரும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாஜகவிற்கான கெட்ட காலம் விரைவில் வரும் என மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ஜெயா பச்சன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனின் மனைவியும், சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பியுமான ஜெயா பச்சன், போதைப் பொருள் தடுப்பு சட்ட திருத்த மசோதா குறித்த விவாதத்தில் நேற்று கலந்து கொண்டார். அப்போது, 12 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயா பச்சன் பேசினார். இதனைத் தொடர்ந்து, சபாநாயகர் இருக்கையில் இருந்த புவனேஸ்வர் கலிதா, மசோதா குறித்து பேசுமாறு ஜெயா பச்சனை அறிவுறுத்தினார். இருப்பினும், எம்.பிக்கள் இடைநீக்கம் பற்றியே ஜெயா பச்சன் பேசிய நிலையில், அவையில் இருந்த பாஜக எம்.பிக்கள் சிலர், ஜெயா பச்சனை தனிப்பட்ட ரீதியில் விமர்சித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயா பச்சன், பாஜகவிற்கான கெட்ட காலம் விரைவில் வரும் என்றும், தான் சாபம் விடுகிறேன் என்றும் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில், ஜெயா பச்சனின் மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராயிடம் அமலாக்கத்துறையினர் நேற்று விசாரணை நடத்திய நிலையில், மாநிலங்களவையில் அவர் இவ்வாறு பேசியது குறிப்பிடத்தக்கது.