சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு.. கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
சுவேந்துவின் வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு.. கொல்கத்தா நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மேற்குவங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றி பெற்றதை எதிர்த்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார்.மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், 213 இடங்களில் வென்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைத்தது. இருப்பினும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் தோல்வி அடைந்தார். இந்நிலையில் சுவேந்து அதிகாரியின் வெற்றியை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி வழக்கு தொடர்ந்து உள்ளார். இது தொடர்பான விசாரணையை கொல்கத்தா உயர்நீதிமன்றம் இன்று தொடங்க உள்ளது.