பிரதமர் பொருளாதாரத்தை அழித்து விட்டார்" - காங். எம்.பி. ராகுல்காந்தி குற்றச்சாட்டு
பிரதமர் நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டார் என்றும், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, மீண்டும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துளளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ஒரு காலத்தில் இந்தியா, உலகின் மிக உயர்ந்த செயல்திறன் கொண்ட பொருளாதாரமாக இருந்தாக கூறியுள்ளார். ஆனால் இன்று பங்களாதேஷ் இந்தியா விட முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு கொரோனாதான் காரணம் என்று, மத்திய அரசு கூறுவதாக தெரிவித்துள்ள ராகுல், பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தான் உண்மையான காரணம் என கூறியுள்ளார். பொருளாதாரம் 2 சதவீத இழப்பை சந்திக்கும் என்று மன்மோகன் சிங் கூறியிருந்தை நாம் கவனிக்க வேண்டும் என்ற ராகுல்காந்தி,பிரதமர் நமது பொருளாதாரத்தை அழித்துவிட்டதாக கூறினார். நாம் அனைவரும் ஒன்றாக மீண்டும் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்