உலகில் மிக நீளமான அடல் சுரங்க பாதை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்
உலகில் மிக நீளமான அடல் சுரங்க பாதையை ஹிமாச்சல் பிரதேச மாநிலம் ரோட்டங்கில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியையும் லாஹாவ் - ஸ்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியையும் இணைக்கும் வகையில் சுமார் 9.2 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப்பாதை அமைக்க கடந்த 2000ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயால் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற கட்டுமான பணி நிறைவடைந்ததை அடுத்து, இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். இதன்மூலம் மணாலி மற்றும் லே இடையிலான சாலை பயண தூரம் 46 கிலோ மீட்டர் அளவுக்கு குறையும். அதேபோல், கடும் பனிப்பொழிவு காலங்களிலும் இனி இந்த வழியாக போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.