நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கு கொரோனா தொற்று- மருத்துவமனையில் அனுமதி
அமித்ஷா, பிரதான் உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில்,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமித்ஷா, பிரதான் உள்ளிட்டோரை தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சர், ஷெகாவத்துக்கும் கொரோனா தொற்று உறுதியான நிலையில்,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டேன் என அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இதில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். கடந்த நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தானாகவே பரிசோதனை செய்து, தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று அமைச்சர் ஷெகாவத் குறிப்பிட்டுள்ளார்.