ஏழைகளின் உரிமைகளுக்கான தினம் - தட்டில் ஒலி எழுப்பி அனுசரித்த ராஷ்ட்ரிய ஜனதா தளம்
பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் தன்னுடைய இல்லத்தின் முன்பு தட்டில் ஒலி எழுப்பி, ஏழைகளின் உரிமைகளுக்கான தினத்தை அனுசரித்தார்.
பீகார் மாநிலம், பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவரான தேஜஸ்வி யாதவ் தன்னுடைய இல்லத்தின் முன்பு தட்டில் ஒலி எழுப்பி, ஏழைகளின் உரிமைகளுக்கான தினத்தை அனுசரித்தார். இன்று, பாஜக ஆட்சியின் ஓராண்டை கொண்டாடும் விதமாக, அமித்ஷா டிஜிட்டல் பேரணியை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இதை கண்டித்து ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் இன்று, ஏழைகளின் உரிமைகளுக்கான தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் தலைவர்கள் பங்கேற்று தட்டில் ஒலியை எழுப்பி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.