கேரளாவில் காட்டுத் தீயை அணைக்க அதிநவீன வாகனம்

கேரளாவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏற்படும் தீ விபத்துகளை அணைப்பதற்கான அதிநவீன தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-01-14 04:36 GMT
கேரளாவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் ஏற்படும் தீ விபத்துகளை அணைப்பதற்கான அதிநவீன தீயணைப்பு வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரள வனத்துறை சார்பில்  வாங்கப்பட்டுள்ள 2 வாகனங்களின் சேவையை, துறை அமைச்சர் ராஜூ கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த வாகனம் மூலம், தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு துரிதமாக சென்று காட்டுத்தீயை அணைக்க முடியும் என தெரிவித்தார். மேலும், இதில் 450 லிட்டர் வரை தண்ணீரை சேமித்து வைக்கவும், 100 மீட்டர் உயரம் வரை தண்ணீர் பீய்ச்சி அடிக்கவும் முடியும் என்று அவர் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்