"வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க நடவடிக்கை இல்லை" - ஆதிவாசி திருவிழா நிகழ்ச்சியில் ராகுல்காந்தி விமர்சனம்
இந்திய பொருளாதாரம் அனைத்து மதத்தினர் மற்றும் சாதியினர் பங்களிப்பு இல்லாமல் இயங்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்திய பொருளாதாரம் அனைத்து மதத்தினர் மற்றும் சாதியினர் பங்களிப்பு இல்லாமல் இயங்க முடியாது என ராகுல் காந்தி கூறியுள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்பபூரில் ஆதிவாசி திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய அவர் இந்தியாவின் அனைத்து சமூகத்தினரின் பங்களிப்புடனேயே பொருளாதாரம் இயங்குவதாக குறிப்பிட்டார். நாடாளுமன்றமும், சட்டமன்றமும் வேலைவாய்ப்பு சிக்கல்களை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் எதிர்பார்க்கின்றனர், ஆனால் அதற்கான பணிகள் நடப்பதாக தெரியவில்லை என்றும் விமர்சனம் செய்தார். நிகழ்ச்சியில் ஆதிவாசிகளுடன் இணைந்து ராகுல் காந்தி நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.