"குடியுரிமை சட்டதிருத்தம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது" - தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் கருத்து

குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானதாக இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-20 20:59 GMT
குடியுரிமை திருத்த சட்டம், அரசியல் சாசனத்திற்கு நேர் எதிரானதாக இருப்பதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இலங்கை அகதிகள் முகாம், சிறை முகாம் போல உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர்,  இரட்டை குடியுரிமை வழங்கவில்லை என்றால் இலங்கை தமிழர்களை ஐ.நா. அகதிகள் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்