மழையால் விழுந்த பள்ளம்.. எதையும் யோசிக்காமல் களத்தில் இறங்கி வேலை செய்த அமைச்சர்
காரைக்காலில் மழையால் சாலையில் உண்டான பள்ளத்தை வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கி அமைச்சர் சீரமைத்த சம்பவம் பாராட்டுகளைப் பெற்றுள்ளது... வேட்டைக்காரர் தெருவில் தனியார் பள்ளி அருகில் சாலையில் மழைநீர் தேங்கி நின்று பள்ளம் ஏற்பட்டது. பள்ளம் இருப்பதை அறியாமல் சென்றதால் விபத்தும் பதிவானது... இதையறிந்த புதுவை அமைச்சர் திருமுருகன் நேரில் சென்று மழைநீரில் இறங்கி JCB இயந்திரத்தின் உதவியுடன் சாலையை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தார்... அப்பகுதி மக்கள் திருமுருகனுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்...