"குடியுரிமை சட்ட திருத்தம் : இந்திய குடிமக்களுக்கு பாதிப்பு கிடையாது" - பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தகவல்
குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இந்திய குடிமக்கள் எவருக்கும் பாதிப்பு கிடையாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்தம் மூலம் இந்திய குடிமக்கள் எவருக்கும் பாதிப்பு கிடையாது என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியுரிமை சட்டம் திருத்தப்பட்டதில் எந்த தவறும் கிடையாது என்றும், இதனை கலவர சிந்தனையோடு அணுகினால், அதனை எதிர்கொள்ள பாஜக தயார் என்றும் கூறினார். இலங்கையில் உள்ள தமிழர்கள் சுயகவுரவம் மற்றும் பாதுகாப்புடன் வாழ மத்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.