அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் - சுற்றுப்பயணத்தில் முதலீட்டாளர்களுடன் சந்திப்பு
துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தின் 10 நாள் அமெரிக்க பயணம் தொடர்பான விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளன.
* நவம்பர் 8 முதல் நவம்பர் 17 வரை அரசுமுறை பயணமாக அமெரிக்க செல்லும் அவர், சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டிசி மற்றும் நியூயார்க் நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
* தமிழகத்திற்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை சார்ந்த திட்டப்பணிகளை பார்வையிடுதல், தொழில் முனைவோர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பன்னீர் செல்வம் பங்கேற்கிறார்.
* மேலும், சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் குழந்தைகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அமெரிக்க வாழ் தமிழர்களுடன்
உரையாடுகிறார்.
* இந்த பயணத்தின் போது, American Multi Ethnic Coalition என்ற அமைப்பின் சார்பாக "சர்வதேச வளரும் நட்சதிரம் - ஆசியா என்ற விருதும் பன்னீர் செல்வத்துக்கு உள்ளது