பரூக் அப்துல்லாவுக்காக ஆட்கொணர்வு மனு : வைகோ மனு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூப் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூப் அப்துல்லாவை ஆஜர்படுத்தக் கோரி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பரூக் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே, தெரிவித்திருந்தது. இதையடுத்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், உரிய அமைப்பிடம் முறையிட வைகோவுக்கு அறிவுறுத்தியுள்ளது.