ஐ.நாவில் இன்றிரவு 7 மணிக்கு பிரதமர் மோடி உரை
அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இன்றிரவு, நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார்
அமெரிக்காவில் ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, இன்றிரவு, நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுகிறார். இந்திய நேரப்படி, இந்த உரை இரவு 7 மணிக்கு துவங்கும். ஐ. நாவில், பிரதமர் மோடி உரையாற்றுவது, இது 2-வது முறையாகும். தனது உரையில், அமைதி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், காஷ்மீர் விவகாரம் குறித்து, பிரதமர் மோடி, தமது உரையில் எந்த கருத்தையும் வெளியிட மாட்டார் என வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.