"தமிழகத்தை சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி கைது" -பாஜக செய்தி தொடர்பாளர் தகவலால் பரபரப்பு

தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறினார்.

Update: 2019-09-13 10:43 GMT
தமிழகத்தைச் சேர்ந்த மேலும் ஒரு அரசியல்வாதி விரைவில் கைது செய்யப்படுவார் என பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வின்குமார் உபாத்யாயா கூறினார். ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற  அவர், இந்தியா முழுவதும் 5 பேர் மிகப்பெரிய ஊழலில் தொடர்பு உள்ளவர்கள் என்றும், அதில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்றும் விமர்சித்தார். சிதம்பரம் கைதாகி தற்போது சிறையில் இருப்பதுபோல, மற்றொரு தமிழக அரசியல்வாதியும்  விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அஸ்வின்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்