"வறட்சி, கடன்சுமையிலிருந்து விவசாயிகளை காத்திட வேண்டும்" - நடிகை சுமலதா எம்.பி. மக்களவையில் கோரிக்கை

வறட்சி, கடன்சுமை, தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக காத்திட வேண்டும் என, மாண்டியா தொகுதி எம்.பி.யான நடிகை சுமலதா மக்களவையில் வேண்டுகோள் விடுத்தார்.

Update: 2019-07-02 18:57 GMT
வறட்சி, கடன்சுமை, தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் விவசாயிகளை மத்திய அரசு உடனடியாக காத்திட வேண்டும் என, மாண்டியா தொகுதி எம்.பி.யான நடிகை சுமலதா மக்களவையில் வேண்டுகோள் விடுத்தார். கர்நாடக மாநிலம், மாண்டியா தொகுதியில் வெற்றி பெற்ற நடிகை சுமலதா, மக்களவையில், தமது கன்னிப்பேச்சை துவக்கினார். 'ஜெய் ஜவான் ஜெய் கிசான்' என உரையை துவக்கிய சுமலதா, மாண்டியா தொகுதியில் வறட்சி காரணமாக விவசாயிகள் படும் துன்பங்களை பட்டியலிட்டார். மேலும் மத்திய அரசு உருவாக்கியுள்ள 'ஜல்சக்தி' அமைச்சகத்தின் மூலம், அவசரநிலை நடவடிக்கை எடுத்து, மாண்டியா விவசாயிகளை காக்க வேண்டும் என, மக்களவையில், அவர் வேண்டுகோள் விடுத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்