ஆந்திராவுக்கு 5 துணை முதல்வர்கள் - ஜெகன்மோகனின் புதிய திட்டம்
நாட்டிலேயே முதன்முறையாக ஆந்திராவுக்கு 5 துணை முதல் அமைச்சர்களை நியமிக்க ஜெகன்மோகன் புதிய திட்டம்.
ஆந்திர சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 30ஆம் தேதி ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நாட்டிலேயே முதன்முறையாக 5 துணை முதல் அமைச்சர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அதன்படி, பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், காப்பு மற்றும் இதர சிறுபான்மை பிரிவை சேர்ந்தவர்களுக்கு தலா ஒரு துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். 25 பேரை கொண்டதாக தனது அமைச்சரவை இருக்கும் என்று அறிவித்துள்ள ஜெகன்மோகன் ரெட்டி, இரண்டரை ஆண்டுக்கு பிறகு மீண்டும் அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.