"ஆட்சியை முறையாக நடத்த தெரியவில்லை" - புதுச்சேரி முதல்வர் மீது பாஜக புகார்
ஆட்சியை முறையாக நடத்த தெரியாமல் துணைநிலை ஆளுநர் மீது பழி போடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது பாஜக எம்எல்ஏ சாமிநாதன் புகார் தெரிவித்துள்ளார்.
ஆட்சியை முறையாக நடத்த தெரியாமல் துணைநிலை ஆளுநர் மீது பழி போடுவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது பாஜக எம்எல்ஏ சாமிநாதன் புகார் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பாஜகவில் இணையும் விழா, புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சாமிநாதன், ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என நாராயணசாமி அறிவித்திருப்பது நாடகம் எனவும் குற்றஞ்சாட்டினார். மேலும், புதுச்சேரி மக்கள் இந்தி மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து மத்திய அரசிடம் ஆய்வு அறிக்கை வழங்க உள்ளதாகவும் சாமிநாதன் எம்எல்ஏ கூறினார்.