அரவக்குறிச்சியில் ம.நீ.ம. கட்சிக்கு மிக குறைந்த வாக்கு - கமல்ஹாசன் சர்ச்சை பேச்சால் ஆதரவு குறைந்ததா..?

தமிழகதில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறிப்பிட தகுந்த அளவில் வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது.

Update: 2019-05-24 02:07 GMT
தமிழகதில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் குறிப்பிட தகுந்த அளவில் வாக்குகளை பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, 22 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. அக்கட்சி பெரம்பூர் தொகுதியில் அதிகபட்சமாக 10 புள்ளி 86 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதேபோல் பூந்தமல்லி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் 4 சதவீதத்திற்கும் மேல் மக்கள் நீதிமய்யம் கட்சி வாக்குகளை பெற்றுள்ளது. 

ஆனால் அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி மிக குறைந்த அளவாக பூஜ்யம் புள்ளி 79 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அக்கட்சி வேட்பாளர் மோகன்ராஜூ, ஆயிரத்து 361 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். அத்தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டியில் பிரசாரம் மேற்கொண்ட போது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மகாத்மா காந்தியை கொன்ற  கோட்சே ஒரு இந்து தீவிரவாதி என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  
Tags:    

மேலும் செய்திகள்