பிரதமர் மோடியை திருடன் என்று கூறிய கருத்து : நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ராகுல் காந்தி

பிரதமர் மோடியை திருடன் என கூறிய விவகாரத்தில், ராகுல் காந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளா

Update: 2019-05-08 20:08 GMT
ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியை,  உச்ச நீதிமன்றமே திருடன் என்று கூறி விட்டதாக ராகுல்காந்தி விமர்சித்த நிலையில், அவர் மீது, பாஜக எம்.பி. மீனாட்சி லெகி, அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து தனது பேச்சுக்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். ஆனால், திருப்தி இல்லை என கூறி விரிவான விளக்கம் அளிக்குமாறு ராகுலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி,ராகுல் பதில் மனுதாக்கல் செய்தபோது, இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியிருந்தனர்இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தரப்பில் 3 பக்க புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறியதாக பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக ராகுல் கூறியுள்ளார். தனது மன்னிப்பை ஏற்று, தன் மீதான அவமதிப்பு வழக்குகளை முடித்து வைக்குமாறும் ராகுல் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்