பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு : ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடந்த 23ம் தேதி பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அதில் பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்படலாம் என்றும் பேசியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கடந்த 23ம் தேதி பங்கேற்று பேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, பிரதமர் மோடி புதிய சட்டம் ஒன்றை உருவாக்கி உள்ளதாகவும், அதில் பழங்குடியினர் சுட்டுக் கொல்லப்படலாம் என்றும் பேசியுள்ளார். இதுகுறித்து பா.ஜ.க.வை சேர்ந்த ஸ்ரீநீரஜ் மற்றும் ஓம் பதக் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் சர்ச்சை பேச்சு குறித்து, 48 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.