அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்குங்கள் - ராமதாஸ்

அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2019-04-29 07:20 GMT
இதுதொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் துணைக் கல்லூரிகளில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ. மற்றும் எம்.டெக் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வுகளை மட்டும் அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் என அதன் பதிவாளர் அறிவித்துள்ளார். துணைவேந்தர் சூரப்பா ஆணைப்படி வெளியிடப்பட்டு உள்ள இந்த அறிவிப்பு வீண் குழப்பங்களை ஏற்படுத்தும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். 
டான்செட் நுழைவுத்தேர்வுக்கான அறிவிக்கை எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்த்திருந்த பொறியியல் உள்ளிட்ட பட்டதாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்திருக்கிறது என்றும் ராமதாஸ் சுட்டிக்காட்டி உள்ளார். சூரப்பாவின் தலைமையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கல்வித்தரமும் சீரழிந்து வருவதாக தெரிவித்துள்ள ராமதாஸ் அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்கி விட்டு, சிறந்த கல்வியாளர் ஒருவரை அப்பதவியில் அமர்த்த வேண்டும் என்று ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்