தொப்பி அணிந்து வாக்கு கேட்ட முதலமைச்சர் : மாலை அணிவித்த சிறுமிக்கு முத்தம்
மாலை அணிவித்த சிறுமிக்கு முத்தம்
நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , கூத்தாநல்லூர் கடைவீதியில் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது வழங்கிய தொப்பியை அவர் அணிந்து கொண்டார். பர்தா அணிந்த பெண்கள் பலரும் முதலமைச்சருடன் செல்பி எடுத்துக் கொண்டனர் . தனக்கு மாலை அணிவித்த சிறுமியை தூக்கி முதலமைச்சர் முத்தமிட்டார்.