"அரசியல் சட்டத்தை அழிக்க முயற்சி" - பா.ஜ.க மீது திமுக வேட்பாளர் ஆ.ராசா குற்றச்சாட்டு

இந்த தேசத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள்ஆதரவு தர வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கேட்டுக்கொண்டார்.

Update: 2019-03-23 22:29 GMT
இந்த தேசத்தை காக்க திமுக கூட்டணிக்கு மக்கள்ஆதரவு தர வேண்டும் என்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா  கேட்டுக்கொண்டார்.  சத்தியமங்கலத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஆ.ராசா  ஆதரவு திரட்டினார். அப்போது பேசிய அவர், அரசியல் சட்டத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மோடி  தலைமையிலான பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அரசியல் சட்டம் பழுதாகிவிட்டால் சமூக நல்லிணக்கம், மத நல்லிணக்கம் தொலைந்துபோய் இந்தியா காட்டாட்சியின் தர்பாராக மாறும் என்றும் ஆ.ராசா தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்