"அதிமுக தலைமையில் தான் கூட்டணி முடிவாகும்" - பன்னீர்செல்வம்

நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி முடிவாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-06 07:14 GMT
நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி முடிவாகும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூட்டணி முடிவுகளுக்கு பின்னரே, எத்தனை தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்தார். விசாரணைக்கு ஆணையம் அழைத்தால் ஆஜராவேன் என்று கூறிய அவர், முல்லை பெரியாறு விவகாரத்தில், தமிழக அரசு முறையாக உச்சநீதிமன்றத்தில் போராடி உரிமையை மீட்டுள்ளதாக தெரிவித்தார். எம்.பி தேர்தலில், தனது மகன் விருப்ப மனு அளித்தது ஏன்? என்பது குறித்தும், கேள்வி ஒன்றிற்கு அவர் விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்