"கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது?" : தி.மு.க. பேச்சு வார்த்தை குழுவுடன் ஸ்டாலின் ஆலோசனை

தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் நேற்று ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

Update: 2019-01-28 03:14 GMT
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. இந்த நிலையில், கடந்த 20-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக  துரைமுருகன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழுவின் முதல் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில்,  ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதில், தி.மு.க. கூட்டணியில் இடம்பெற உள்ள, கட்சிகளுக்கு எத்தனை மற்றும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆளும் கட்சியான அ.தி.மு.க. கூட்டணி குறித்து வெளிப்படையாக அறிவிக்காத நிலையில், தி.மு.க. புதிய வியூகம் அமைத்து வருவதாகவும், நேற்றைய கூட்டத்தில் தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தி.மு.க. தொடங்கும் என தெரிகிறது.

Tags:    

மேலும் செய்திகள்