உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்கு தான் காரணம் - செல்லூர் ராஜு
தேர்தல்களை நிறுத்தக் கோரி வழக்குப் போடுவது தி.மு.க. என்றும், ஆனால் பழி அரசு மீது வருவதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கூட்டுறவுத் துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாமல் இருப்பதற்கு தி.மு.க. தொடர்ந்த வழக்கு தான் காரணம் என்றும், எந்த நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.