அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அதிமுக சார்பில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வழக்கு எப்போது வாபஸ் பெறப்படுகிறதோ அப்போது இடைத்தேர்தல் நடக்கும் என்றார். மேலும் கட்சிக்குள் விரிசல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.