மத்திய அரசைக் கண்டித்து உதகையில் பா.ம.க. போராட்டம்
நீலகிரியில் உள்ள உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூட முயற்சிக்கும் மத்திய அரசை கண்டித்து பாமகவினர் இன்று உதகையில் போராட்டம் நடத்தினர்.
60 ஆண்டுகளாக இயங்கி வரும் உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையத்தை மூடும், மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணியும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டிலேயே ஊட்டி மற்றும் பஞ்சாப்பில் மட்டுமே உருளைக் கிழங்கு ஆராய்ச்சி மையங்கள் உள்ளன என்றும், இதில் புதிய ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதுமட்டுமல்லாமல், வாழை, கரும்பு, மீன், ஆராய்ச்சி மையங்களை மூடும் நிலைக்கு மத்திய அரசு வந்தால், பா.ம.க தொடர் போராட்டங்களில் ஈடுபடும் என்றும் ஜி.கே.மணி தெரிவித்தார்.