"தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பேசாதீர்கள்" - பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் அறிவுரை
பிரதமர் மோடி பொதுக்கூட்டங்களில் பேசும் போது தரம் தார்ந்த சொற்களை பயன்படுத்தக் கூடாது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.
டெல்லியில் மனீஷ் திவாரியின் "Fables of Fractured Times" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அரசியல்வாதிகளின் பேச்சுகள், தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருப்பதாக கவலை தெரிவித்தார். பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் மோடி பேசும்போது தரம் தாழ்ந்த மொழியை பயன்படுத்தவதாகவும் அவருக்கு கட்டுப்பாடு தேவை என்றும் வலியுறுத்தினார்.
ஒரு நாட்டின் பிரதமராக இருக்கும் மோடியின் நடத்தை மதிப்பு மிக்கதாகவும் சீராகவும் இருக்க வேண்டும் என்றும் மன்மோகன் சிங் அறிவுரை வழங்கினார்.காங்கிரஸ் ஆட்சியில், ஒரு போதும் பாஜக ஆட்சி நடக்கும் மாநிலம் என்று பாகுபாடு காட்டியது கிடையாது என்று தெரிவித்த மன்மோகன் தகுதியுள்ளவர்களுக்கு மரியாதை கொடுத்து வந்துள்ளோம் என்றும் கூறினார்.