"நேரடியாக டெண்டர் கொடுத்தால் ஊழலுக்கு வழி வகுக்கும்" - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்கு வழி வகுக்கும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-14 16:13 GMT
சேலம் மற்றும் சென்னை நெடுஞ்சாலைத்துறை வட்டார அலுவலகங்களில் 310 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் அறிவிக்கைகளை ரத்து செய்து, இணைய வழியில் டெண்டர்கள் பெறப்படும் என உடனடியாக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நெடுஞ்சாலைத்துறையில் இணையவழி டெண்டர் இருப்பதால் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என கூறிய முதலமைச்சர் இப்போது, ஆன்லைனை தவிர்த்து விட்டு, டெண்டர்களை நேரடியாகப் பெறுவது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். விதிகளை மீறி மகன், சம்பந்தி நிறுவனங்களுக்கு உலக வங்கி நிதியுதவியில் டெண்டர்களைக் கொடுத்து முதலமைச்சர் பழனிசாமி ஊழல் புரிந்து வருவதாக ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். எனவே, தமிழகத்தில் உள்ள எந்த அலுவலகத்திலும் டெண்டர்களை நேரடியாகப் பெறுவது, ஊழல் செய்வதற்கு வழி வகுக்கும் என்றும், அதனால், நேரடியாகப் பெறும் முறையை கைவிட்டு, இணைய வழி மூலம், அதனை பெற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சேலம் மற்றும் சென்னை வட்டார அலுவலகங்களின் 310 கோடி மதிப்புள்ள டெண்டர் அறிவிக்கைகளையும் ரத்து செய்து விட்டு, இணைய வழியிலேயே டெண்டர்கள் பெறப்படும் என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்