நடுக்கடலில் நடந்த சம்பவம்... "24 மணி நேரத்தில்.." - அச்சுறுத்தும் தேஜ் புயல்

Update: 2023-10-22 07:17 GMT

தேஜ் மிக தீவிர புயலானது நேற்று இரவு ஏமன் சோகோட்ராவில் இருந்து கிழக்கு தென் கிழக்கு திசையில் 330 கிலோ மீட்டர் தொலைவிலும், ஓமன் சலாளாவில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 690 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது... இன்று முற்பகல் வேளையில் மிக அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது... இது வரும் 24ம் தேதி மாலை ஏமன் அல் காயிதா மற்றும் ஓமன் சாலாலாவிற்கு இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 3 மணி நேரத்துக்கும் மேலாக நகராமல் அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது... இது ஒடிசா பரதீபிற்கு தெற்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்கத்தின் தெற்கு திகாவில் இருந்து 760 கிலோமீட்டர் தொலைவிலும், வங்கதேசத்தின் கீபுபரவில் இருந்து 980 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்