ஆளுநரை உளவு பார்க்கிறதா கொல்கத்தா போலீஸ்? West Bengal | governor

Update: 2024-06-18 09:11 GMT

மேற்கு வங்கத்தில் ஆளுநர் மாளிகையைவிட்டு கொல்கத்தா போலீஸ் வெளியேற அம்மாநில ஆளுநர் ஏ.கே.போஸ் உத்தரவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகள் குறித்து புகார் அளிக்க வருபவர்களை, உரிய அனுமதியிருந்தும் அவர்களை போலீஸ் ஆளுநர் மாளிகைக்குள் அனுமதிப்பது இல்லை என ஆளுநர் ஏ.கே. போஸ் குற்றம் சாட்டியிருந்தார். ஆளுநராக தனது பணியை செய்ய விடாமல் போலீஸ் தடுப்பதாக பதில் கேட்டு மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியிருந்தார். கொல்கத்தா போலீஸ் தம்மை உளவு பார்ப்பதாக ஆளுநர் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கொல்கத்தா போலீஸ் ஆளுநர் மாளிகையைவிட்டு வெளியேற ஆளுநர் ஏ.கே. போலீஸ் உத்தரவிட்டுள்ளார். ஆனால், தங்களுக்கு அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வரவில்லை என கொல்கத்தா போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உத்தரவு உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் ஏ.கே. போசுக்கு ஏற்கனவே சி.ஆர்.பி.எப். வீரர்கள் அடங்கிய இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது வெளிப்புற பாதுகாப்பை மட்டுமே போலீஸ் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்