2018ல் வேரோடு அறுத்த இடத்தில் நிலச்சரிவில் மரித்தவர்கள் அடக்கம்..சபிக்கப்பட்ட புத்துமலை சுடுகாடானது

Update: 2024-08-06 09:21 GMT

வயநாடு நிலச்சரிவில் இருந்து மீட்கப்பட்ட 36 உடல்கள் அனைத்து மத நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.

வயநாடு நிலச்சரிவில் சிக்கி 390க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 190-க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் தனித்தனியாக கண்டெடுக்கப்பட்டன. இதில் 36 உடல்களுக்கு யாரும் உரிமை கோராத நிலையில், அவை புத்துமலை பகுதியில் தனியார் தேயிலை தோட்டத்தில் அனைத்து மத நம்பிக்கையின்படி நல்லடக்கம் செய்யப்பட்டது. இதோடு, 160க்கும் மேற்பட்ட உடல் உறுப்புகளும் இங்கு நல்லடக்கம் செய்யப்பட்டன. ஒவ்வொரு உடலுக்கும் எண்கள் குறிப்பிட்டு அதன்படி புதைக் குழியில் புதைக்கப்பட்டன. கடந்த 2018 ஆம் ஆண்டு புத்துமலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஏராளமானோர் ஊரை காலி செய்த நிலையில், தற்போதைய நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் புத்துமலையிலேயே புதைக்கப்படுவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்