வெளியான டிஎன்ஏ முடிவுகள்.. வயநாட்டில் அடுத்த ஷாக்! பதறி போன உறவினர்கள்.. அடுத்தது என்ன? | Wayanad

Update: 2024-08-18 12:06 GMT

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் டி.என்.ஏ முடிவுகள் வரதொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 119 ஆக குறைந்துள்ளது..

கேரளாவில் வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 420க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களின் முதல் வரைவு பட்டியலில் 128 பேர் இருந்தனர். தற்போது இறந்து போனவர்களின் டி.என்.ஏ முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 119 ஆக குறைந்துள்ளது. இதற்கிடையே வயநாட்டில் முதல் கட்ட தேடுதல் பணி முடிவடைந்ததுள்ளதாகவும், உறவினர்கள் கோரிக்கை விடுத்தால் மீண்டும் தேடுதல் பணிகள் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் சுரல்மலையில் எஞ்சியுள்ள வர்த்தக நிலையங்களை சுத்தப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும் முகாம்களில் உள்ளவர்கள் தற்காலிக வீடுகளுக்கு தற்போது மாறத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்