"கண்மூடித்தனமாக.." - ஓட்டு மெஷின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து
ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பின் பண்பாட்டை பேணுவதன் அவசியத்தை உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. விவிபேட் விவகாரத்தில் ஆய்வு செய்து முடிவு எடுப்பதில் சமநிலை போக்கு அவசியம் என்றும் அதேசமயம், தற்போது உள்ள தேர்தல் முறையை கண் மூடித்தனமாக சந்தேகம் கொள்வது ஐயவாதத்தை உருவாக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதித்துறை, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றம் ஆகிய அனைத்து தூண்களும் ஒன்றுக்கொன்று இசைவுடன் இருந்து, நம்பிக்கையுடன் இருப்பதே ஜனநாயகமாகும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நம்பிக்கை, ஒத்துழைப்பு பண்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என கூறியுள்ள உச்சநீதிமன்றம், ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன என தெரிவித்துள்ளது.