பிரபல நிறுவனங்களின் பெயரில் தண்ணீர் பாட்டில்.. கலெக்டர் அதிரடி உத்தரவு

Update: 2024-10-07 01:56 GMT

உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பத் மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர பிரதாப் சிங் மற்றும் எஸ்பி அர்பித் விஜயவர்கியா ஆகியோர் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபோது

இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆட்சியருக்கு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில் போலியானது என தெரிய வந்ததை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் கவுரிபூரை சேர்ந்த பீம் சிங் என்பவர் உரிமம் இல்லாமல் பிரபல நிறுவனங்களின் பெயரில் தண்ணீர் பாட்டில் தயார் செய்து விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து மீம்சிங் விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்த 2 ஆயிரத்து 700 தண்ணீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்