சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பா.ஜ.க MLA ..9 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த நியாயம்
உத்தரப்பிரதேசத்தில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில், பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. துத்தி சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராம்துலர் கோண்ட் மீது கடந்த 2014ம் ஆண்டு, சிறுமியை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், ராம்துலருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சோன்பத்ரா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமியின் மறுவாழ்வுக்காக 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. சிறைத்தண்டனையால் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து ராம்துலர் கோண்ட் தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்.