பேய்போல வந்த மந்தாகினி வெள்ளம்.. உயிரை கையில் பிடித்து ஓடிய மக்கள்.. வெளியான பரபரப்பான காட்சிகள்

Update: 2024-08-01 04:22 GMT

உத்தரகாண்ட் மந்தாகினி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கரையோர மக்கள் இரவோடு இரவாக வெளியேற்றப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத்- கௌரி குண்ட் வழித்தடத்தில் ஆற்றை தாண்டி சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள சந்தைகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர். தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆன்மீக யாத்திரையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்