புதுச்சேரி ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட சேதராப்பட்டு தொழிற்பேட்டையில், போலி மதுபானம் தயார் செய்யப்பட்டு தமிழகத்திற்கு அனுப்பப்படுவதாக கலால் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு போலீசார் சோதனை செய்தபோது, போலி மதுபானம் தயாரிப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து. போலி மதுபான தொழிற்சாலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தொழிற்சாலையில் இருந்த எரிசாராயம், போலி டாஸ்மார்க் ஸ்டிக்கர், பாட்டில்கள், 2 வாகனங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே, போலி மதுபான தொழிற்சாலை உரிமையாளர் ராஜசேகர் உட்பட பலரை போலீசார் தேடி வருகின்றனர்.