டார்ச்சர் செய்த 2 மனைவிகள்..! போலீஸ்காரர் அரங்கேற்றிய கொடூரம் -கிடந்த 4 சடலங்கள்; அதிர்ந்த போலீசார்

Update: 2023-10-06 17:44 GMT

ஆந்திராவில் சொத்துக்களை இரு மனைவிகளுக்கும் பிரித்து தருவதில் ஏற்பட்ட தகராறில், முதல் மனைவி மற்றும் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்ற காவலர், தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


ஆந்திர மாநிலம் கடப்பா நகரை சேர்ந்தவர் தலைமை காவலர் வெங்கடேஸ்வரன். இவருக்கு இரு பெண்களுடன் திருமணமான நிலையில், தனது சொத்துக்களை மனைவி இருவருக்கும் பிரித்து தருவதில், கடும் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த காவலர், முதல் மனைவி மற்றும் அவரின் இரு பெண் குழந்தைகளை துப்பாக்கியால் சுட்டு கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், காவலர் வெங்கடேஸ்வரன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்த நிலையில், அக்கடிதத்தில் தனது ஓய்வு தொகை மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் இரண்டாவது மனைவி மற்றும் மகன்களுக்கு கொடுக்க வேண்டும் என அவர் எழுதியிருப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

-

Tags:    

மேலும் செய்திகள்