தெருவில் நின்ற வக்கீலை கொடூரமாக கொன்ற மைத்துனன் - தூத்துக்குடியை மிரளவிட்ட சம்பவம்
தூத்துக்குடியில் வழக்கறிஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தங்கை கணவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி அண்ணா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் செந்தில் ஆறுமுகம். வழக்கறிஞரான இவர் தூத்துக்குடி அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுக நயினாரின் அண்ணன் மகன் ஆவார். தெருவில் நின்று கொண்டிருந்த செந்தில் ஆறுமுகத்தை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நமர்கள் சராமரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் நடந்த இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நேரில் விசாரணை நடத்தினார். இந்த வழக்கில், கொலை செய்யப்பட்ட செந்தில் ஆறுமுகத்தின் தங்கை கணவரான கோபி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.