அடித்து சென்ற காட்டாற்று வெள்ளம்... ஆற்றின் குறுக்கே சிக்கிய பொதுமக்கள் - அதிர்ச்சி காட்சிகள்
கேரள மாநிலம் பாலக்காட்டில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பாலக்காயம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், கார்மல் பள்ளி முற்றத்திலும், தேவாலய வளாகத்தையும் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. கனமழையால், காஞ்சிராபுழா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இரும்பமுட்டியில் ஆற்றின் குறுக்கே 2 பேர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்க தீயணைப்புப் படையினர் விரைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் 3 ஷட்டர்கள் மூலம் தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வனப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால். பொதுமக்கள் அச்சடைந்துள்ளனர்.