காலையில் சிறுமியை கடத்திய கும்பல்.. மாலையில் பூங்காவில் தனியே நின்ற சிறுமி - நடந்தது என்ன..?

Update: 2023-11-29 10:22 GMT

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஓயூர் பகுதியை சேர்ந்த ஆறு வயது சிறுமி தனது சகோதரனுடன் டியூஷனுக்கு செல்லும்போது மர்ம கும்பலால் கடத்தப்பட்டார். வெள்ளை நிற காரில் கடத்தி செல்லப்பட்டது

தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 20 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பின்பும் மர்ம கும்பலையோ சிறுமியையோ கண்டுபிடிக்க முடியாத நிலையே நீடித்து வந்தது. இதற்கிடையே, கொல்லம் மாநகரத்தின் ஆசிராமம் பகுதியில் உள்ள மைதானத்தில் அக்கும்பல் சிறுமி இறக்கி விட்ட பின்பு மாயமானது. எவ்வித பாதிப்பும் இன்றி சிறுமி மீட்கப்பட்டதால் அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்