மொத்த வெறியையும் டிராக்டர் ஏற்றி.. இளைஞரை தீர்த்துக்கட்டிய கொடூர நபர்...
ராஜஸ்தான் மாநிலத்தில் நிலப்பிரச்சினையில், இளைஞர் ஒருவர் டிராக்டர் ஏற்றி கொல்லப்படும் வீடியோ வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. பரத்பூர் மாவட்டம் அட்டா கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பகதூர் மற்றும் அத்தர் சிங் குர்ஜர் ஆகிய இரண்டு குடும்பத்தினர் இடையே நீண்ட காலம் நிலப்பிரச்சினை நிலவி வருகிறது. சம்பவத்தன்று நிலப் பிரச்சினைக்கு எதிர்ப்பு தெரிவித்து அத்தர் சிங் தரப்பை சேர்ந்த இளைஞர் தரையில் படுத்து தர்ணா செய்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த மற்றொரு தரப்பு, பல முறை இளைஞர் மீது டிராக்டரர் ஏற்றி கொன்றது. சம்பவத்தின் போது செல்போனில் படம் பிடிக்கப்பட்ட காட்சிகள் தற்போது வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.