தலைநகரில் மாறும் மனநிலை.. கார், பைக்கை விட்டு பஸ்களில் பயணிக்கவே விரும்புவார்கள்.. கெஜ்ரிவால் உறுதி

Update: 2023-11-22 07:45 GMT

டெல்லியில் செயலி மூலம் பிரீமியம் பேருந்து சேவையைத் தொடங்க, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. அம்மாநில துணை நிலைய ஆளுநர் வி.கே.சக்சேனா ஒப்புதலுக்கு பிறகு , பிரீமியம் பேருந்து சேவைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இது குறித்து, டெல்லி முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், இந்தச் சேவை டெல்லியின் பொதுப் போக்குவரத்து அமைப்பில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். மக்கள் கார், ஸ்கூட்டர்களை விட்டுவிட்டு, பேருந்துகளில் பயணிக்கத் தொடங்குவார்கள் என்றும், அதை அர்த்தமுள்ளதாக்க கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்திருக்கிறோம் என்றும் பதவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்